மட்டு பெரியகல்லாற்றில் பேரணியுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம்!காணொளி இணைப்பு

மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 10,ம் கட்ட பொதுப்பிரசாரபணி இன்று 19/07/2020   முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த பிரசாரப்பணியல் கிழக்கு மாகாணசபை முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச உபதவிசாளர் திருமதி ரஞ்சினி, மட்டக்களப்புமாட்ட தமிழரசு கட்சி மகளிர் அணி தலைவி தேவமணி உட்பட பெரியகல்லாறு தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுகட்சி உறுப்பினர்கள், வாலிபர் அணி உறுப்பினர்கள், இளைஞர்கள் பொத்துமக்கள் மகளீர் என பலதரப்பட்டவர்களும் கலந்துகொண்டு வீட்டுச்சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற பிரசாரத்தை முன்எடுத்ததுடன் கலந்துரையாடல்களும் பல இடங்களில் இடம்பெற்றன.