பெரியகல்லாறு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரவிழா

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆடிப்பூரம் நாளை முன்னிட்டு அம்மன் ஆலயங்களில் இன்று விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தினை முன்னிட்டு விசேட பூஜைகள் வழிபாடுகள் பாற்குட பவனி நடைபெற்றது.
பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாளுக்கான பால்குட பவனி நடைபெற்றது.
பால்குட பவனியை தொடர்ந்து ஆலயத்தில் விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் அம்பாளுக்கு அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதம பூசகர் த.தவராஜா தலைமையில் நடைபெற்ற இன்றைய ஆடிப்பூர உற்சவமானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன் அம்பாளுக்கு பூப்போட்டு வணங்கும் நிகழ்வும் நடைபெற்றது.