தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் உதவிகள் வழங்கிவைப்பு –விழிப்புணர்வு நடவடிக்கையும் முன்னெடுப்பு

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் மட்டக்களப்பு,செங்கலடி பதுளை வீதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள 5 கிராமங்களில் உள்ள 80 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் செங்கலடி பதுளை வீதியைச் சேர்த கித்துள், சர்வோதயநகர்,உருகாமம், கோப்பவெளி, வெளிக்காகண்டி, புல்லுமலை போன்ற கிராமங்களை சேர்ந்த 80 குடும்பங்களுக்கான 1000 ரூபா பெறுமதியான நிவாரண பொதி வழங்கி வைக்கப்பட்டது.

சுகாதார நடைமுறை பேணி நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கொரணா வைரசின் தாக்கம் தொடர்பிலும் சுகாதார வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியன் செயலாளர் செ. நிலாந்தன் அவர்களினால் இது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.