சூரிய கிரகணம் தொடர்பாக மட்டக்களப்பு சைவ நற்பணி மன்றம் தலைவர் சத்தியோஜாத சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ அ. கு.லிகிதராஜக்குருக்கள் வெளியிடும் செய்தி.
வருகிற சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (07) 21.06.2020. ஞாயிற்றுக்கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம்.
சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்
காலை 10.25 முதல் மதியம் 1.31 வரை உள்ளது.
பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:
1. மிருகசீரிடம், 2,3பாதம்
2. திருவாதிரை
3.புனர்பூசம் 1,2,3பாதம்
4. சித்திரை
5. விசாகம் 4பாதம்
6. அனுசம்
7. கேட்டை
8. அவிட்டம் ஆகியன
மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக்காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?
1. வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமசிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின் பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.
3. வீட்டில் இருக்கும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை போட வேண்டும்.
4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.
5. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்..
