மஹிந்த அரசாங்கத்திற்கு கூட நாங்கள் ஆதரவினை தெரிவிக்ககூடிய சூழல் உருவாகும்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருந்தால் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் அவர்களது அரசாங்கத்திற்கு கூட நாங்கள் ஆதரவினை தெரிவிக்ககூடிய சூழல் உருவாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உருப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாக வாழைச்சேனை அரசியல் பணிமணையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

பொதுவாக கடந்தகால அரசாங்கத்தில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவினை கொடுத்திருந்தோம் எங்களைப் பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமோ அல்லது பொதுஜன பெரமுன அரசாங்கமோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கமோ அல்லது சஜித் பிரேமதாசா அரசாங்கமோ எதுவாக இருந்தாலும் சிங்கள பேரினவாத அரசாங்கம்தான் இவர்களில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை யார் தீர்ப்பதில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கின்றார்களோ அவர்களோடு எப்போதும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

அந்த வகையிலே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி தேர்தலின் பின்னர் அவர்கள் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருந்தால் அதே நேரத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கின்ற புதிய அரசியல் யாப்பு விடயத்தில் கூடிய அக்கரையை காட்டுகின்ற செயற்பாட்டிற்கு முன்வந்து எங்களது வேண்டுகோளை ஏற்று எங்களோடு பேசி எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை தர முன்வருவார்களாக இருந்தால் அவர்களது அரசாங்கத்திற்குகூட நாங்கள் ஆதரவினை தெரிவிக்க்கூடிய சூழல் உருவாகும்.

எங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் ஒன்றுதான் பொதுஜன பெரமுன அரசாங்கமும் ஒன்றுதான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் அல்லது சஜித் பிரேமதாசா அரசாங்கம் எல்லாம் ஒன்றுதான் எங்களுக்கு முக்கியம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கின்ற கட்சிகள் யாருடனும் நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வேளைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்ற தோரனையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் இளைஞர்கள் மத்தியில் கூறி அவரது அலுவலகத்திற்கு அழைக்கின்ற நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார் இது ஒரு பிழையான நடவடிக்கை தேர்தல் அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை காட்ட வேண்டும் ஜனநாய ரீதியில் நடைபெறுகின்ற தேர்தலை பிழையான முறையில் நடாத்துவதற்கு முயற்சிக்க்கூடாது பிழையான கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் வைத்து வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையில் வேலை வாய்ப்பினை தருவோம் என்று கூறி விண்ணப்பப்படிவம் வழங்கும் ஏமாற்று நடவடிக்கையினை உடன் தடுத்தது நிறுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை பொறுத்தவரை பல அரசியல் கட்சிகளும் சுயேற்சை குழுக்கழுமாக களம் இறங்கியுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் பெரும்பாலும் ஆதரித்து வருகின்றார்கள் ஆனால் இம்முறை பல போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன பல தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு பலத்தினை உடைக்க வேண்டும் என்றவகையில் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டு இருக்கின்றது கடந்த காலங்களிலும் தமிழ் சிங்கள முஸ்லீம்களை இணைத்திருந்த கட்சிகள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பெற்று அதன் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனி தமிழ் வேட்பாளர்களை மாத்திரம் கொண்டு களம் இறக்கியுள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதிலும் எதிர்கால அபிவிருத்தியை அவர்களுக்கு உருவாக்குவதிலும் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பூரணமாக செயற்படும் வண்ணம் தங்களது பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது அதனை நிவர்த்தி செய்வதில் தேர்தலின் பின்னரும் செயற்படும் என்றும் தெரிவித்தார்.