வருகின்ற 11 ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டமும் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் இயல்புக்கு திரும்பும் அதேவேளை இதுவரை காலமும் மாவட்டத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து சேவையானது எதிர்வரும் திங்கள் கிழமை முதல் கிழக்கு மாகாணத்திற்குள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதோடு, மாகாணத்திற்குள் பிரயாணம் செய்வதற்கான அனுமதியானது பின்வரும் தரப்புக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
*.அரச உத்தியோகத்தர்கள்.
*.தனியார் துறை உத்தியோகத்தர்கள்.
*.சுகாதார பரிசோதகர்கள் அல்லது மருத்துவ அதிகாரியின் அனுமதிப் பத்திரம் பெற்றோர்.
*.தனியார் துறை உத்தியோகத்தர்கள்.
*.சுகாதார பரிசோதகர்கள் அல்லது மருத்துவ அதிகாரியின் அனுமதிப் பத்திரம் பெற்றோர்.
பிரயாணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதோடு பஸ் தரிப்பு நிலையங்களிலும், பஸ்களின் உள்ளேயும் சமுக இடைவெளியினைக் கட்டாயம் பேணுமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
உணவகங்களில் உணவு பொதிகளை வாங்கி செல்லும் நடைமுறையினை மாத்திரம் பின்பற்ற வேண்டும், போன்ற பல அறிவுறுத்தல்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் விடுக்கப்பட்டுள்ளது.
