மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் இரண்டு இடங்களில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொரணா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரடங்கு காலத்தில் சட்ட விரோத மதுபாவனையை கட்டுப்படுத்தும் வகையில் மதவரித்திணைக்களத்தினால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக கசிப்பு உற்பத்தி அண்மைக்காலகமாக அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறும் பல்வேறு கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் வாழைச்சேனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போ இரண்டு இடங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கு கசிப்பு காய்ச்சுவதற்கு தயார் நிலையிலிருந்த கோடாவும் மீட்கப்பட்டது.
வாழைச்சேi பகுதியில் உள்ள பேத்தாழை மற்றும் கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
இதடினப்படையில் 31000மில்லி லீற்றர் கசிப்பு காய்ச்சுவதற்கான கோடா மீட்கப்பட்டதுடன் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது இருவருக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பிரதான பரிசோதகர் தெரிவித்தார்.