மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரால் நிவாரண உதவிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக தொழில்வாய்ப்பினை இழந்து மிகவும் கஸ்ட நிலையினை எதிர்கொண்டுள்ளவர்களுக்கான உதவிகள் வழங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கினால் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கிய நிலையிலும் பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பல்வேறு உதவிகளையும் வழங்கிவருகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொழில் இழந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கே.காந்தராஜாவினால் இன்று நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வறிய நிலையில் உள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கே.காந்தராஜா தெரிவித்தார்.