துறைநீலாவணைக் கிராமத்திற்க்கு உதவிய களுவாஞ்சிகுடி சமூகசேவகர்.


துறைநீலாவணை கிராமத்தின் 6 மற்றும் 5 வட்டார கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள தேவைப்பாடுமிக்க 150 குடும்பங்களுக்கு களுவாஞ்சிகுடி வட்டார பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களினால் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உதவியினை தனது பிறந்தநாளில் (02.04.2020)  மேகசுந்தரம் வினோராஜ்
 இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் விடுத்த சிபார்சின் பெயரில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது .

உணவுப்பொதிகள்  5ம் வட்டார கிராம அபிவிருத்திச்சங்க செயலாளர் ,
6ம் வட்டார கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ,துறைநீலாவணை வேல்முருகன் ஆலய செயலாளர் ஆகியோர் பங்குபற்றலுடன்  சிவசக்தி விளையாட்டுக்கழக தலைவர் செயலாளர்  மற்றும் உறுப்பினர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .