சுவிஸ் உதயம் அமைப்பினால் நிவாரண நடவடிக்கைகள்

கொரொனா நோய்ப்பரவலினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு பொது அமைப்புகளும் செல்வந்தர்களும்,புலம்பெயர் அமைப்புகளும் வறிய மக்களுக்கு உதவும் நடவடிக்கைகள் முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் காணப்படும் மக்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் இன்று வணங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் சுவிஸ் நாட்டில் உள்ள பிஎம்ரி மோகன் ஜுவலர்ஸ் உரிமையாளர் சுவிஸ் உதயம் ஊடாக நிதியினை வழங்கி இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது 1500ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 100குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய் சங்க பொருளாளர் க.துரைநாயகம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு கிளையின் உபசெயலாளருமான திருமதி செல்வி மனோகர்,மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றிய தலைவி திருமதி க.ரோமிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.