மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடாவின் ஆற்றில் உள்ள தீவு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் இது தொடர்பில் குறித்த பிரதேச மீனவ சங்கத்தின் தலைவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் உதவியுடன் இன்று காலை முதலைக்குடாவில் உள்ள ஆற்றின் நடுவில் உள்ள சிறாத்தீவு என்னும் பகுதியிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ஏ.குணவர்த்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்திக்காக 11பரல்களில் வைக்கப்பட்டிருந்த 1,980,000மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் 10000மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டது.
அத்துடன் கசிப்பு காய்ச்சுவதற்கு தேவையான உபகரணங்கள் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டதுடன் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை நடாத்தியதாக தெரிவிக்கப்படும் பிரதேசத்தின் மீனவர் சங்க தலைவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.