(ரஞ்சன்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் அச்சம் காரனமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35ம் கிராமத்தில் உள்ள கண்ணபுரம் மேற்கு,கண்ணபுரம் கிழக்கு. கிராமசேவகப் பிரிவுகளுக்கும் நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டன.
நிவாரனப்பணியானது போரதீவுப்பற்று பிரதேசசபையின் பாலையடி வட்டார உறுப்பினர் மனோகரனின் பங்களிப்புடனும் பிரதேச நலன் விரும்பிகளின் பங்களிப்புடனும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனியின் பங்களிப்புடனும் வழங்கப்பட்டன.
35ம் கிராமத்தின். கண்ணபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் கண்ணபுரம்சனசமுக சங்கத்தினரும் இளஞர்களுமஇணைந்து இதற்கான உதவிகளை வழங்கியதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தெரிவித்தார்.
இதேவேளை மிகவும் பின்தங்கிய இப்பகுதி மக்கள் பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் நிலையில் நலன் விரும்பிகளின் உதவிகளைப்பெற்று மக்களுக்கு உதவிகளை வழங்கும்போது அதற்கான ஒத்துழைப்புகள் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுவதில்லையென தெரிவித்தார்.
நிவாரணங்களை வழங்குவதற்கு மாவட்ட செயலகம் அனுமதி வழங்குகின்றபோதிலும் பிரதேச செயலகம் ஊடாக அனுமதி வழங்கப்படுவதில்லையெனவும் தெரிவித்தார்.