மட்டக்களப்பில் கொரனா தொற்றுள்ளதாக கண்டறியப்பட்டவர் பூரண சுகமடைந்தார் –அழைத்துவரவும் ஏற்பாடு

மட்டக்களப்பில் கொரனா தொற்றிய நிலையில் இனங்காணப்பட்டு அங்கோடை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தவர் பூரண சுகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொற்று உள்ளதாக இனங்காணப்பட்டு அங்கோடை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இவர் பூரண சுகமடைந்துள்ள நிலையில் அவரை அழைத்துவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.