பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகள்

(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கொரனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு காரணமாக தொழில்களை இழந்து மிகவும் கஸ்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இளைஞர் அமைப்புகளினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் இரண்டாம் கட்ட நிவாரணப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

பெரியபோரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தினால் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக சென்று வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கான வாகன வசதியை பெரியபோரதீவு பட்டாபுரம் இளைஞர் ஒன்றியத்தின் வேன்டுதலுக்கு அமைய. போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.