கிழக்கு இந்துக்குருமார் ஒன்றியம் விடுக்கு முக்கிய அறிவித்தல் -நிவாரண பணிகளும் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அரசாங்கத்தின் அறிவித்தல்களை ஏற்று வீடுகளில் இருந்து வழிபாடுகளையும் இறை சிந்தனைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்துக்குருமாரும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையேற்று அதன்அடிப்படையில் செயற்படுமாறும் கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கு.மு.உதயகுமார குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தினால் நிவாரணப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழில் இழந்து அன்றாடம் உணவுக்கு கஸ்டங்களை எதிர்நோக்கும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகளை கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியம் முன்னெடுத்துவருகின்றது.

இதன் கீழ் ஏறாவூர்ப்பற்று,கிரான்.வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரை பகுதி மக்களுக்கான ஒரு தொகுதி நிவாரணப்பொருட்கள் இன்று கொண்டுசெல்லப்பட்டு வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு குறித்த பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கு.மு.உதயகுமார குருக்கள்,