மட்டக்களப்பு பெரியகல்லாறில் ஆலயங்களில் பொது அமைப்பகளினால் வறிய மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நேக்கிவருகின்றனர்.
பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகம் மற்றும் விஸ்வப்பிரம்ம வாலிபர் சங்கம் என்பன இணைந்து இந்த நிவாரணம் வழங்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.
இதன் இரண்டாம் கட்டமாக பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயம்,ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயம் மற்றும் புலம்பெயர் மக்கள்,நலன் விரும்பிகளின் உதவியுடன் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது 1200ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் பொதிகள் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
அன்றாடம் தொழில்செய்து தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டுவந்தோர் தொடச்சியான ஊரடங்கு காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.