திக்கோடை 50வீட்டுத்திட்டத்தில் குடிநீர் குழாயில் கசிவு - துரிதமாக செயற்பட்ட பிரதேசசபை

மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட தும்பங்கேணி கிராமிய  நீர்வழங்கள் நிலையத்திற்கு உட்பட்ட திக்கோடை 50வீட்டுத்திட்டத்தில்  உள்ள குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட நீர் கசிவு  போரதீவுப்பற்று பிரதேசசபையினால் திருத்தியமைக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட தும்பங்கேணி கிராமிய  நீர்வழங்கள் நிலையத்தின் ஊடாக பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போதைய வறட்சியான காலநிலையினால் போரதீவுப்பற்று பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திக்கோடை 50வீட்டுத்திட்டத்தில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பிரதேசசபை ஊழியர்களின் உதவியுடன் குறித்த கசிவு திருத்தியமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடிநீரைப்பெற்றுக்கொள்ளவழியேற்படுத்தப்பட்டது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்குரிய குறித்த பகுதியில் மக்களின் நன்மை கருதி குறித்த விரைவான சேவையை பிரதேசசபை முன்னெடுத்துள்ளது.