கண்ணபுரம் கண்ணபுரம் கிழக்கு காக்காச்சிவட்டை பிலாலிவேம்பு வெல்லாவெளி போன்ற கிராமங்களில் வாழ்வாதாரங்களை இழந்த 250 குடும்பங்களுக்கு நிவாரண உணவுப் பொதிகள்; வழங்கு வைத்தல்






நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினை வராமல் தடுப்பதற்காக போரதீவுப்பற்று  பிரிவிலுள்ள கண்ணபுரம் கண்ணபுரம் கிழக்கு காக்காச்சிவட்டை பிலாலிவேம்பு வெல்லாவெளி கிராமங்களிலுள்ள வாழ்வாதாரங்களை இழந்து நிக்கதியாகியுள்ள  250 குடும்பங்களுக்கு பெரியகல்லாறு கடலாட்சியம்மன் ஆலயம் சார்பாக நேசக்கரம் நீட்டியுள்ளார்கள்.
ஆலயம் சார்பாக நிதிபங்களிப்பு மூலம் ஒரு குடும்பத்திற்கு தலா 2018.00  பெறுமதியான 250 உலர் உணவு பொதிகள் வெல்லாவெளி சக்தி கலா மன்றத்தின் உறுப்பினர்கள் இணைந்து கிராமம் கிராமமாக சென்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி   பொது சுகாதார உத்தியோகத்தர்கள் சக்தி கலாமன்றம் கி.சே.உத்தியோகத்தரர்கள் அபிவிருத்தி உத்தியோகத்ர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம அமைப்பக்கள் இணந்து நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.
போரதீவுப்பற்று பிரிவிலுள்ள மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இவ் நிவாரண பொதிகள் சென்றடைய வேண்டும் என்பதில் நிதயுதவி வழங்கியவரும் பிரதேச செயலாளரும் மிகவும்  உறுதியாக இருப்பதாக  அவ்கள் தெரிவித்தனர் இதேபோன்ற உதவிகள் மேலும் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணபுரம் கி.சே பிரிவுக்கு-75 கண்ணபுரம் கிழக்கு கி.சே பிரிவுக்கு -75 காக்காச்சிவட்டை கி.சே பிரிவுக்கு 40 வெல்லாவெளி கி.சே பிரிவுக்கு -20 பிலாலிவேம்பு கி.சே பிரிவுக்கு -40 நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் இதே போன்ற பொதிகளை மேலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.குறிப்பிடத்தக்கது