இருதயபுரம் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் இரத்ததானமுகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் காரணமாக இரத்தம் வழங்குவோரின் எண்ணிக்கை குறைந்துவருவதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெரும் இரத்தப்பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டாக்டர் க.விவேக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,இருதயபுரத்தில் இன்று காலை இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றுவருகின்றது.

இருதயபுரம் இருதயஆண்டவர் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறை மற்றும் கொரணா அச்சுறுத்தல் காரணமாக ஏனைய நோயாளர்களுக்கு இரத்தப்பற்றாக்குறையை எதிர்கொள்வதன் காரணமாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்தானமுகாமில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கிவருகின்றனர்.

இருதயபுரம் இருதயஆண்டவர் ஆலய பங்குத்தந்தை பேதுறு ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டாக்டர் க.விவேக், கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் தயானந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.