சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பிலான கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபையின் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் கா.சித்திரவேல்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி ரி.குகராஜா,மாநகரசபையின் சுகாதார குழு தலைவர் சிவம்பாக்கியநாதன்,பிரதி ஆணையாளர் என்.சிவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொடர்பிலான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும்போது அங்குள்ள கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலையில் கழிவுகளை அகற்றும்போது மேற்கொள்ளப்படும் முறைகளுக்கு அமைவாக கழிவகற்றல் செயற்பாடுகள் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இதேபோன்று வைத்தியசாலையில் கடந்த பல மாதங்களாக அழிக்கப்படாமல் உள்ள கழிவுகளை அங்கிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் கொரனா போன்ற தொற்றுக்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படவேண்டிய விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.