ஆபத்து ஆபத்து ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது ஏற்படும் ஆபத்து!!

கொரோணா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஊரடங்கு சட்டமும் பொதுமக்களை பாதுகாப்பதாக அமைந்தாலும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது கொரோணா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான பல ஆபத்தான சூழ்நிலைகளுக்கு பொதுமக்கள் முகம் கொடுக்க நேரிடுகிறது.

இதனை பொது மக்கள், வர்த்தகர்கள், தனியார் வர்த்தக நிலையங்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

பொதுமக்கள் ஒன்று கூடக் கூடாது நெருக்கமான பகுதிகளுக்கு செல்ல கூடாது அவ்வாறு சென்றால் கொரோணா வைரஸ் தோற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னுமொருவருக்கு இலகுவாக பரவும் அதனால் முழு நாடே ஆபத்தை எதிர்கொள்ளும் என்பதற்காகவே அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை மிக கடுமையாக அமுல்படுத்தி வருகிறது.

ஆனால் அதேவேளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது மிக மோசமான சனநெரிசல்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் வங்கிகளில் பணம் பெறுவதற்கும், எரிபொருளை நிரப்புவதற்கும் பொதுமக்கள் ஒன்று கூடுகின்றனர்.

இவ்வாறு கூடும் பொதுமக்களில் 75 வீதமானோர் கொரோணா வைரஸ் தோற்று குறித்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது மிகவும் நெருக்கமாக கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

அவர்களது இலக்கு முற்றும் முழுதாக இரண்டு நாட்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை எப்படியாவது 2 மணிக்குள் வாங்கிவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.

அதுவும் இந்த 100 ரூபாய் டின் மீன், 65 ரூபாய் பருப்பை இன்றைக்காவது எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று காலையில் இருந்து வரிசையில் நின்றவர் பலர். ஒருவருக்கு 2 kg பருப்பு,2 டின் மீன் மட்டுமே வழங்கப்பட்டது ஆனால் அதுவும் 1 மணியுடன் சதோச பூட் சிட்டிகள் மூடப்பட்டதால் பல பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

எனவே தற்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதும் அதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வர்த்தக நிலையங்களில் கூடுவதும் நெருக்கமாக இருப்பதுவுமே பெரும் ஆபத்தானதாக மாறியுள்ளது.

ஏனெனில் ஒரு கொரோணா வைரஸ் தோற்று உள்ளவருக்கு உடனடியாக அவருக்கு தொற்று இருப்பது தெரியாத நிலையில் இவ்வாறான சனக் கூட்டங்களுக்குள் அவர் இருப்பாராக இருந்தால் நிலமை இன்னும் மோசமாகலாம்.

எனவே அரசாங்கம் என்ன நோக்கத்திற்காக ஊரடங்கு சட்டத்தை கொண்டு வந்ததோ அந்த நோக்கம் நிறைவேறாமல் போகலாம்.

இதைவிட பொதுமக்களை இவ்வாறு ஒன்று கூடும் சூழ்நிலையை உருவாக்குவது மிகவும் ஆபத்தானது எனவே இது குறித்து அரசாங்க கவனம் கொள்ள வேண்டும்.

ஊரடங்கு தளர்த்தப்படும் போது மாற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மாற்று வழிகளை உருவாக்கி செயற்படுத்த வேண்டும்.

இதனை கிராமங்களில் நகரங்களில் உள்ள பொது அமைப்புகள் முகநூல் போராளிகள், உதவும் அமைப்புகள் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்கள் நெருக்கமாக கூடுவதை தவிர்ப்பதற்கான மாற்று உபாயங்களை கண்டுபிடித்து செயற்படுத்துங்கள்.