மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் அன்றாட கூலித்தொழில்செய்வோர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தினமும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு உதவுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இவ்வாறானவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மீனவர்களும் கூலிதொழிலாளர்களும் அதிகளவில் வசிக்கும் பாலமீன்மடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வறிய நிலையில் உள்ளவர்களுக்கு இவ்வாறு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் உறுப்பினருமான வி.பூபாலராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பணியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் உறுப்பினர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுமார் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டன.