அழகுக்கலை பயிற்சி மையத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு உதவி

அழகுக்கலை பயிற்சிகளை மேற்கொள்வோரின் நன்மை கருதி அழகுக்கலை பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஓரு தொகுதி உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அழகுபடுத்தல் நிலையங்களை நடாத்திவருபவர்கள் தொழில்தகைமை சான்றிதழலை பெறுதவற்கான பயிற்சிகள் வை.எம்.சி.ஏ.யில் முன்னெடுக்கப்படுகின்றன.

வை.எம்.சி.ஏ. மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை அமைப்பு என்பன இணைந்து இந்த பயிற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், வை.எம்.சி.ஏ.யின் பணிப்பாளர் ஜெகன் ஜீவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் இங்கு பயிற்சிகளை மேற்கொள்ளும் அழகுக்கலை நிபுணர்கள் தமது பயிற்சிகளை சிறப்பான வகையில் மேற்கொள்வதற்கான நிலையேற்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.