(எஸ்.நவா)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க பல்வேறு செயற்பாடுகள் திணைக்களங்கள் ஊடாக நடைபெற்று வருகின்றது.
இதனடிப்படையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி நன்மை பெறும் குடும்பத்துக்கு 10000 அடிப்படையில் வட்டியில்லாக் கடன் வழங்கப்பட்டு வருகின்றது. 26,27 ம் திகதிகளில் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் 43 கி.சேவை பிரிவுகளில் இக்கடன்திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.நேற்றைய தினமும் வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் 16 பிரிவுகளில் இக்கடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களின் ஆலோசனைகளின்;படி முகாமைத்துவப் பணிப்பாளர் ரீ.தியாகராஜா தலைமை முகாமையாளர் த.தனேந்திரசாசா வெல்லாவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.தர்மப்பிரியா-யோகச்சந்திரன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரும் வீடு வீடாகச் சென்று குடும்பம் ஒன்றுக்கு தலா 5000 வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.