பெரிய போரதீவு அருள்மிகு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தினால் ஒரு தொகை நிவாரணங்கள் வழங்கிவைப்பு

 (எஸ்.நவா)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை காரணமாக பெரியபோரதீவு அருள்மிகு வட பத்திரகாளியம்மன் ஆலய அறங்காவல் சபையினர் 500  நிவாரணப் பொதிகள்; பிரதேச செயலாளரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (26)வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும்  நோக்காக மக்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 1650 பெறுமதியான அரிசி கோதுமைமா பருப்பு சீனி தேயிலை வெள்ளப்பூடு சவற்காரம்; தீப்பெட்டி இப் பொதிகள் ஆலய அறங்காவலர் சபையினர் முன்னின்று இப்பணிகளை செய்து கொண்டது வரவேற்கத்தக்கது.
இதன் போது போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட பெரியபோரதீவு முனைத்தீவு பட்டாபுரம் குடும்பங்களுக்கும்  வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்வர்கள் 72 பேருக்கான பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதேச சுகாதார உத்தியோகத்தர் கு.குபேரன் பிரதேச சபை உறுப்பினர் கி.சிவனேசராசா கி.சே.உத்தியோகத்தர் த.சத்திவேல் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.வவிகரன் மற்றும் ஆலய அறங்காவலர் சபையினர் கிராம அமைப்புக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்