மதுவரித்திணைக்களத்தினால் கடந்த நான்கு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது கசிப்பு உற்பத்திசெய்தி விற்பனை செய்த மற்றும் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த 14பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்தது.
நூட்டில் சட்ட விரோத போதைப்பொருளிளை இல்லாமல்செய்யும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மதுவரித்திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தின் ஊடாக தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவு,வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவு,வாகரை பிரதேச செயலாளர் பிரிவு,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 14பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் பரிசோதகர்களான என்.சிறிகாந்த்,ஈ.பிரதாபன்,ஏ.ஆனந்தராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தனர்.கசிப்பு காய்ச்சியமை,கசிப்பு விற்பனை,சட்ட விரோத மதுபான விற்பனை செய்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது இருபதாயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் கசிப்பு காய்ச்சுவதற்காக வைத்திருந்த 10கிலோ கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் வாழைச்சேனை,வாகரை,களுவாஞ்சிகுடி நீதிமன்றில்களில் இன்று தாக்கல்செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.