(சசி துறையூர்)
31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மத்திய மாகாண உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட ஆடவர் கபடி அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
போட்டி ஆரம்பித்தது முதல் மட்டு ஆடவர் அணி சிறப்பாக விளையாடி 43 புள்ளிகளைப்பெற்று தன்னோடு எதிர்த்து பலப்பரீட்சை நடாத்திய அம்பாறை மாவட்ட அணியை (36புள்ளி) ஏழு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை தனதாக்கி கொண்டது.







