மும்மொழி ஆற்றல் கொண்ட தமிழ் தேசிய வாதியான இரா.சாணக்கியனை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும்.



மட்டு.மண்முனை தென்எருவில் பற்று பிரதேச மக்கள் திடசங்கற்பம்

மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்க மற்றும் மகளிர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளுடன்  இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் சந்திபொன்றினை நடாத்தினார்.

இச்சந்திப்பின் போது குறித்த பிரதேசத்திற்குட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராம அபிவிருத்தி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அங்கு கலந்துகொண்ட  கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

"தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் வழித்தோன்றலான தமிழ் தேசியவாதியான,  மும்மொழி அறிவும், தூரநோக்கு சிந்தனையும் கொண்ட சாணக்கியனைப் போன்ற ஒருவர் நிச்சயமாக பாராளுமன்றம் செல்ல வேண்டும்.

அப்போதுதான் உரிமையுடன் கூடிய அபிவிருத்திகளான  வெளிநாட்டு தூதுவராலயங்களுடன் பேசி அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்களுக்கான முன்மொழிவுகளை வழங்கி அதனூடாக உதவிகளை பெறலாம். இதுவரைக்கும் அவ்வாறு யாரும் செயற்பட்டதாக தென்படவில்லை எனவும்,

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், போரினால்  பாதிப்படைந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், விளையாட்டுக்கழகங்களுக்கான உதவிகள், கல்வி அபிவிருத்திக்கான உதவிகள் போன்ற பல்வேறு உதவிகளை தனது சொந்த நிதியூடாக மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றார்.இவருக்கு நிச்சயமாக அரசியற் பலமொன்றை வழங்கினால் மேலும் பல உதவிகளை செய்வதற்கு உரமூட்டுவதாக அமையும் எனவும் தெரிவித்தனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தக சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், கோயில் அறங்காவலர் சபையினர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், மற்றும் தமிழரசு கட்சி வட்டார கிளை அமைப்புக்கள் போன்றன இரா.சாணக்கியனின் வெற்றியை உறுதிப்படுத்தி கொண்டிருப்பதுடன் அவருடைய வெற்றியையும் உறுதி செய்துள்ளனர். மேலும் ஏனைய பிரதேசங்களில் உள்ள அமைப்புக்களையும்  சந்தித்து வருகின்றார்.