மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு

மட்டக்களப்பு வின்சன் மகளீர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி தவத்திருமகள் உதயகுமார் இன்று(26.02.2020) உத்தியோக பூர்வமாக பதவியினை ஏற்றுக்கொண்டார்.

திருமதி உதயகுமார் அவர்கள் தனது கல்விச் சேவையினை 1988 ஆம் ஆண்டு ஆசிரியராக புல்லுமலை அரச தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பித்தார் பின்பு மட்டக்களப்பு தெரேசா பெண்கள் பாடசாலை, நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றி 1993 ஆம் ஆண்டு சிவானந்த தேசிய பாடசாலையில் ஆசிரியராக பணியினை ஆரம்பித்து அங்கு 17 வருடங்கள் கடமை புரிந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு  சிவானந்த தேசிய பாடசாலையில் கடமையாற்றும் போதே அதிபர் தரத்திற்கு உயர்ந்த திருமதி உதயகுமார் 2010 இல் கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியிலும், 2012 இல் அரசடி மகாஜனக் கல்லூரியிலும் அதிபராக சேவையாற்றி 2013 இல் ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் அதிபராக பொறுப்பு வகித்து தற்போது வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த கல்விப் பின்னணி கொண்ட குடும்பத்தினை சேர்ந்த இவர் நல்லதொரு கல்வி நிர்வாகியாக சேவையினை வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சு.குலேந்திரகுமார், அதிபர் உதயகுமார், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இப் பாடசாலையின் அதிபராக பதவி வகித்த திருமதி சி.சுபாகரன் அவர்கள் தற்போது வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.