முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தில் ‘உதிரம் கொடுப்போம்,உயிர்காப்போம்’

மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவில் 1920ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குறித்த பாடசாலை பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்து இன்று பட்டிருப்பு கல்வி வலயத்தில் சிறந்த கல்விப்பணியை மேற்கொண்டுவருகின்றது.

இந்த ஆண்டு பாடசாலையின் நூற்றாண்டு அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று காலை இரத்ததானமுகாம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் அனுசரணையுடன் பாடசாலையின் பழைய மாணவர்களும் பாடசாலையின் நூற்றாண்டு விழாக்குழுவும் இணைந்து இந்த இரத்ததானமுகாமினை நடாத்தினர்.

பாடசாலையின் அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் டாக்டர் மனோதுசாந்தன்,போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ம.சுகிகரன்,விழாக்குழு உறுப்பினர் ந.துஸ்யனந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இரத்ததானமுகாமில் பெருமளவான பழைய மாணவர்களும் மாணவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.