நான்கரை வருடத்தில் செய்யாததை நான் 60 நாட்களில் செய்துள்ளேன் -வியாழேந்திரன் எம்.பி.(video)

எதிர்ப்பு அரசியல் காரணமாக சாத்தியமான விடயங்களைக்கூட அடையமுடியாத துர்ப்பாக்கிய நிலையினை கடந்த 72வருடங்களாக தமிழ் மக்கள் எதிர்கொண்டுவந்ததாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.




துற்போது தமிழ் தலைமைகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு அரசியலால் எதனையும் சாதிக்கமுடியாது என தெரிவித்துள்ள அவர் எதிர்கால சந்ததியையும் கையேந்தும் நிலைக்கே அது இட்டுச்செல்லும் எனவும் தெரிவித்தார்.
நான்கரை வருடத்தில் செய்யாததை தான் 60நாட்களுக்குள் செய்துமுடித்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் “நாட்டைக்கட்டியெழுப்பும் சுபீட்சமான நோக்கு”எனும் எண்ணக்கருவிற்கமைய பிரதமர் மகிந்தராஜபக்ஸவினால்; முன்னெடுக்கப்படும் கமட்ட கெயக்-ரட்டட்ட ஹெட்டக் (கிராமத்திற்கு வீடு-நாட்டுக்கு எதிர்காலம்) அடிக்கல் நாட்டு விழா இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
முட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் இந்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சுpறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.