விநாயகர் விநாயகசஸ்டி விரத்தின் கஜமுகா சூர சம்ஹாரம் தீர்த உற்சவமும் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தில்


  
இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த விரதங்களில் ஒன்றாக விநாயகசஸ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று காலை கஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள்   தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றன.

கடந்த 21 தினங்களாக ஆலயத்தில் விநாயகசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டுவந்த நிலையில் இறுதிநாளான நேற்று கஜமுகா சூர சம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக ஆலய முன்றிலுக்கு விநாயகப்பெருமான் எழுந்தருளிய நிலையில் அங்கு ஜமுகா சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த சூரசம்ஹார நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர். இன்று காலை விரம் அனுட்டித்த அடியார்களின் காப்பு அறுக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு பால புஷ்கருணியில் தீர்த்த உற்சபம் இடம் பெற்றது.