மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளினால் வாவியினை தூய்மைப்படுத்தும் சிரமதானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலான சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களில் உள்ள பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றும் வகையிலான சிரமதான பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு வாவியோரங்களில் அதிகளவான குப்பைகள் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கிருந்து அதிகளவான நுளம்பு பெருக்கம் காணப்படுவதன் காரணமாக அப்பகுதியில் சுத்தம் செய்யப்பட்டன.

மட்டிக்கழியில் இருந்து சீலாமுனை வரையிலான பகுதிகள் இன்று காலை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனமும் இணைந்து இந்த சிரமதான பணியை முன்னெடுத்தது.

இந்த சிரமதான பணியில் பெருமளவான இளைஞர் யுவதிகளும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.