கடந்த ஆட்சிபோன்று அல்லாமல் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கும்போது வேறுபாடுகளை காட்டி இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதாகவும் ஆனால் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் 53ஆயிரம்பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் காலத்தில் உள்வாரி வெளிவாரி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகளின் கையெழுத்துப்பெறும் போராட்டத்தின் இறுதிநாளான இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டு பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தமக்கான தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்ககளப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கையெழுத்துப்பெறும் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த போராட்டத்தின் இறுதிநாளான இன்று நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்துகொண்டு கையொப்பங்களை இட்டனர்.
சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளில் பல ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவற்றிற்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுனரை வலியுறுத்தவுள்ளதாகவும் மட்டக்ககளப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் க.அனிதன் தெரிவித்தார்.