துறைநீலாவணையில் காட்சிப்பொருளான ஓடாத அம்பியூலன்ஸ்.



துறைநீலாவணை கிராமத்திற்கென உள்ள மருத்துவமனைக்கு அதன் ஆரம்பகாலத்திலிருந்து பாரிய குறைபாடாகவிருந்த அம்பியூலன்ஸ் ஒன்று.

அம்பியூலன்ஸ் வாகனம் பெற்று பலவருடமாகிறது ஆனால்  இன்று அதன் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது நோயாளர்கள் பெரிதும் அசெகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நிரந்தரமாக சாரதி ஒருவர் இன்மையால்  விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடுகளில் இருந்து திடீர் நோய்வாய்ப்பட்டவர்களை இந்த வைத்தியசாலைக்கு கொண்டுசென்றால் அம்பியூலன்ஸ் மூலமாக அருகில் உள்ள கல்முனை களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாது என மறுக்கப்படுகிறது. 
இந்த பிரச்சினை மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

அண்மையில் விபத்துக்குள்ளான இளைஞர்கள் இருவர் தலையில் காயமுற்ற நிலையில் இரவு நேரத்தில் துறைநீலாவணை வைத்தியசாலைக்கு  கொண்டுசென்ற போது வைத்தியரும் சேவையில் இல்லாத நிலையில் அம்பியூலன்ஸ் சேவை சாரதி இல்லை என மறுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மிக நீண்ட நேர தாமதத்திற்கு பின்னரே முச்சக்கரவண்டியில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.