புனித மிக்கேல் பழைய மாணவர்களினால், டெங்கு விழிப்புணர்வு நடைபவனிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு நடைபவனிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

புனித மிக்கல் கல்லூரி 2006 உயர்தர மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் புளியந்தீவு பொதுசுகாதார பரிசோதர் பிரிவும் இணைந்து மட்டு நகரில் டெங்கு விழிப்புணர்வு நடைபவனியும் நகரை தூய்மை படுத்தல் செயற்பாடும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

அதிகரித்த டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10ம் திகதி ஜனவரி 2020 அன்று மு.ப 9.00 மணிக்கு  டெங்கு அற்ற நாட்டை உருவாக்குவோம் உயிர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மேற்படி விழிப்புணர்வு நடைபவனியும் இடம்பெறவுள்ளது.

புனித மிக்கல் கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பிக்கவுள்ள நடைபவனியானது மட்டு நகர் பஸ்நிலையம் ஊடாக வாவிக்கரை வீதியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி, சென்றல் வீதியூடாக காந்திபூங்காவை வந்தடையவுள்ளது.

ஆர்வமுள்ள இளைஞர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு டெங்கு அற்ற நமது எதிர்கால சந்ததியையும் நகரையும் நாட்டையும் உருவாக்க  ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.