மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

றொபட் தேவசகாயம் சுரேஸ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.

மட்டக்களப்பு மகிழவட்டவானை சேர்ந்த திரு. றொபட் தேவசகாயம் சுரேஸ்
 இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக கடந்த 14.01.2020 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.


மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றும் இவர் திருச்சபை பொருளாளராகவும் ஓய்வுநாட் பாடசாலை ஆசிரியராகவும் உள்ளார்.


தனது சிறுபராயத்திலிருந்தே பல சமூக சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் , முன்னால்  இளைஞர் கழக தலைவராகவும் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவராகவும் ,  சமுர்த்தி செயலணி தலைவராகவும் , தன்னார்வ அமைப்பின் ஆலோசகராகவும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகவும், சர்வோதய சிரமதான சங்க தலைவராகவும் பல அமைப்புகளூடாக சமூக சேவைசெய்து வந்துள்ளதுடன் தற்போதும் சமூகசேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .