கோட்டைமுனை ஸ்ரீஅரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீஅரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (30) நண்பகல் 12.00மணிக்கு ஆரம்பமானது.

தொடர்ந்து 8 நாட்கள் காலையில்உற்சவம் மற்றும் மதியம் கொடித்தம்ப பூஜை நடைபெற்று மாலை யாக பூஜையுடன் வசந்த மண்டபபூஜையுடன் இரவு சுவாமி உள்வீதி வலம் வரும் திருவிழா நடைபெறும்.

எதிர்வரும் 07.02.2020 – வெள்ளிக்கிழமை மாலை சுவாமி முத்துச் சப்பரத்தில் ஆரோகணம் செய்து நகரவீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்ததும் பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெறும்.

08.02.2020 சனிக்கிழமை காலை6.00 மணிக்கு கல்லடி கடற்கரையில் தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த திருவிழா நிறைவு பெறும.;

11.02.2020செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு வைரவர் பூஜை இடம்பெறும்.

மஹோற்சவக் கிரியைகள் யாவும்மஹோற்சவக் குரு பிரம்மஸ்ரீ இலட்சுமிகாந்த ஜெகதீஸ்வர குருக்களின் ஆசியுடன் சிவஸ்ரீசுந்தரகோகுலன் குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.எஸ். ராமதாஸ் குருக்கள், ஆலய உதவிக்குருமார்கள் சிவஸ்ரீ கு.தயா குரு, எஸ்.விக்கினேஸ்வரக் குருக்கள்,ப.மானாகப்போடி குருக்கள் மற்றும் க.பகிரதசர்மா ஆகியோர் நடாத்துவர்.

தாமரைக்கேணி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று மாலை (29) நடைபெற்றுகிராமசாந்தி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.