கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

உடல் வலிக்கு தடவும் தைலத்தால் பறிபோன குழந்தையின் உயிர்-தம்பலவத்தையில் சம்பவம்

கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது குழந்தை பலியாகிய சம்பவம்  காரணமாக ஒரு கிராமமே சோகமயமான நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை  01 ம் திகதி  மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை  அருந்தியதால் மயக்க நிலை அடைந்த சிறுவன் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான்.

பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சைபலனிளிக்காமல் வெள்ளிக்கிழமை(3) இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தது.

இவ்வாறு உயிரிழந்தவர்  ஹரிகரன் துசேன்   எனும் 1 வயதும் 8 மாதமுடைய சிறுவனே மரணமடைந்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டம் தம்பலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தந்தை பணி நிமிர்த்தம் வளைகுடா நாடுஒன்றில் பணி புரிந்து வருகின்றார் .

சிறுவனின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அன்றைய தினம் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த சந்தர்பத்தில்  இத்துயரச்  சம்பவம் நிகழ்ந்துள்ளது.