மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கடமை பொறுப்பேற்பு நிகழ்வு

புதிய ஆண்டில் அரச அலுவலகங்களில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு,தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களின் அரசாங்க சேவை சத்திய பிரமான உறுதி மொழியினையும் பெற்று கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.