களத்தில் Mp வியாழேந்திரன்! சீரற்ற வானிலை நீடிப்பு!! மட்டக்களப்பு மாவடத்தின் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரால் மூழ்கும் அபாயம்!!




நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற அடை மழையானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகம் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாவட்டத்தின் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ள நீரால் அதிகம் பாதிப்புக்குள்ளானதாக மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு குறித்த அடைமழையானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வழிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களது பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதே நேரம் பாதிக்க பட்டு நலன்புரி முகாம்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகள்இ சுகாதார வசதிகள்இ பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ளு.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்க பட்ட கிராமங்களையும்இ பாதிக்க பட்டு நலன்புரி முகாம்களுக்கு கொண்டு சேர்க்கப் பட்ட மக்கள் தொடர்பாகவும் தனது கருத்தை தெரிவித்தார்  நாடாளுமன்ற உறுப்பினர் ளு.வியாழேந்திரன்.

நாட்டில் இடம் பெறுகின்ற அடைமழையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும்இ இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்! குறித்த அடை மழைகாரணமாக அதிகமாக விவசாயிகளும்இ மீனவர்களும்இ அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களும் பாதிக்க பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.
இது தொடர்பாக  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை  மீட்டெடுப்பதற்காக மாவட்டத்தின் அரசாங்க அதிபர் மற்றும் முப்படைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுஇ அரசதிணைக்களங்கள்இ அரசசார்பற்ற நிறுவணங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார். அதே வேளை இன்றுவரை மாவட்டத்தில் மாத்திரம் பொதுமக்களை பாதுகாப்பதற்காக 8 முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்மழை நீரின் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவற்றை ஒழுங்கு படுத்துவதற்காக மாவட்டத்தின்  சகல துறை அதிகாரிகளையும்  அவதானத்துடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 6696 குடும்பங்களும்இ 22614 நபர்கள் பாதிக்க பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் மாவடத்தின் பிரதான குளங்களான
உண்ணிச்சைஇஉறுகாமம்இ வாகநேரிஇகித்துள்வெவஇ கட்டுமுறிவுஇ வெலிக்காகண்டியஇ வடமுனைஇ தும்பங்கேணிஇ நவகிரி ஆகிய குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து அவை திறந்துவிடப்படும் தேவை காணப்படுவதால் மக்களை இதில் இருந்து அவதான நிலையில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நலன்புரி முகாம்களில் சுமார் 301 குடும்பங்கள்இ 799 நபர்கர்கள் தங்கவைக்கப்பட்டுள்தாகவும் அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாகவும்இ சுகாதார தேவைகள் கருதி வைத்திய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தேவை  கருதி பொலிஸ் உஸ்த்தியோகஸ்த்தர்கள்  களப்பணிகளில் அமர்த்தப் பட்டுள்ளதாகவும் 24 மணி நேரமும் தான் உட்பட அணைத்து அரச அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இம்முறை கா.பொ.த சாதாரண பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கான  பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் தொற்று நோய்களில் இருந்து பொதுமக்களை அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 விசேடமாக வெள்ளத்தினால் பாதிக்க பட்ட அனைவருக்குமான  அத்தியாவசிய தேவைகளை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் என்னும் அடிப்படையில் நாட்டின் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்க அவர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சியாக கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.