செங்கலடி கொம்மாதுறையில் மணல் ஏற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு! மட்டு அரச அதிபர் கவணம் செலுத்த மக்கள் கோரிக்கை!




மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட  கொம்மாதுறை ஒருமுழச்சோலை கிராமத்தில் இருந்து பல மாத காலமாக மணல் வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது இதை நிறுத்துவது தொடர்பாக பல நடவடிக்கை மேற்கொண்டும் பலனளிக்காததால்  பொதுமக்கள், கொம்மாதுறைவடக்கு கிராம, அபிவிருத்திசங்கம், மாதர் அமைப்பு கொம்மாதுறை கிழக்குகிராம அபிவிருத்திசங்கம், கொம்மாதுறை வடக்குகிராம சேவையாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டதான் மூலம் மண் ஏற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இம் மணல் கொண்டு செல்வதன் மூலம் எமது பிரதேச வெள்ள அபய நிலை அதிகரித்து செல்கிறது இவீதி சேதம் அடைகிறது, வாகன நெரிசல்(விபத்துக்கள் இடம் பெற வாய்ப்புக்கள் உள்ளது) எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்  

மக்கள் மேட்கொண்ட எதிர்ப்பினால் இந் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் மேலும் இது தொடர வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இவ் விடயம் தொடர்பாக கவணம் வெலுத்துமாறும் மக்கள் கோரிக்ககை முன்வைக்கின்றனர்.