போரைதீவுப்பற்று வெல்லாவெளிப் பிரதேச மக்கள் எதிர் நோக்கிய வன இலாகாக்கா பிரச்சனைக்கு தீர்வு!! Mp S.வியாழேந்திரன்


மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே சுமார் 35 Km தூரத்தில் அமைந்துள்ளது போரைதீவுப்பற்று வெல்லாவெளிப் பிரதேசம். சுமார் 169 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பினை கொண்டதாக  வெல்லாவெளிப்பிரதேசம் காணப்படுகின்றது. முற்றுமுளுதாக விவசாயத்தினையும், கால் நடையினையும் மையப்படுத்தியே அம் மக்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது.
நிலமை இவ்வாறு இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெல்லாவெளிப் பிரதேசத்திற்கு உட்பட்ட தளவாய் விபுலாநந்தபுரம் எனும் வனம்பகுதியானது கிராமவாசிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் வனவளத்துறைத்  திணைக்களத்தினர் காடுகளை அடையாளப்படுத்தி மக்களின் குடியிருப்புக்காணிக்குள் எல்லை கற்களைப் போட்டு தங்களது காணிகள் என அடையாளப்படுத்தும்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நிலமையினை கேட்டறிந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் மாவட்டத்தின்  பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர், வெல்லாவெளிப் பிரதேச பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட அனைவரையும் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அழைத்து மக்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் வண்ணம் சிறிய மக்கள் சந்திப்பு ஒன்றை இன்றைய தினம்  மேற்கொண்டிருந்தார்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை மாவட்டத்தின் வனவள திணைக்களத்திற்கு எதிராக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 
மேலும் கருத்து தெரிவித்த பொதுமக்கள் வெல்லாவெளிப்பிரதேசமானது விவேகாநந்தபுரம் வனப்பகுதியை நம்பியே தங்களது விவசாய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும், தங்களின் மந்தைகளுக்கான மேய்ச்சல்த் தரை நிலமாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு மேற்படி வனப் பிரதேசம் வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டால் கிட்டதட்ட 200 பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர். அதே வேளை இந்த வனப்பகுதியை நம்பியே துறவணையடியூற்று, தும்பங்கேணி, திக்கோடை, தளவாய், 38 கிராமம், காளையடிவட்ட,நெல்லிக்காடு போன்ற கிராமவாசிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். 

இத்தகைய செயற்பாட்டை மட்டக்களப்பு வனவளத் திணைக்களம் உடன்நிறுத்தி அதற்குரிய அந்த வனப்பகுதிக்குரிய அனைத்து உடமைகளையும், அத்தாட்சிகளையும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்  வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தாங்கள் பாதிக்கப் பட்டு தங்களின் தேவையின் நிமிர்த்தம் குரல் எழுப்பும் போது ஒரு சில அரச அதிகாரிகளால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கைக்கு இணங்க சம்மவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் S.வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்.

மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவர் எனும் அடிப்படையில் மக்களுக்கான நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும், மக்களைப் பாதிக்கும் எந்த விடையமும் எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனவும், மக்களுக்காகவே அரசும், அரச திணைக்களங்களும் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட கெளரவ  அமைச்சர் S.m சந்திரசேன அவர்களுடன் தான்  தொலைபேசியில் உரையாடி மேற்படி நடவடிக்கையினை  தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்தகாலங்களில் கொழும்பில் இருந்துகொண்டு வனத்துறை அதிகாரிகள் தன்னிட்சையாக செயற்படும் போது தான் பாராளுமன்றத்தில் எதிர்ப்பினை வெளியிட்டதாகவும், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும் பட்சத்தில் மக்கள் சார்ந்த கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான இறுதி முடிவுகளை வருகின்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் நிச்சயமாக அந்த முடிவுகளை எடுக்கும் போது எமது மக்களுக்கு சாதகமான முடிவுகளே எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிற்பதற்கு அனைத்து சுதந்திரமும் இந்த அரசின் காலத்தில் நிலவியுள்ளதாகவும் இது தொடர்பாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்

தளவாய் விபுலாநந்தபுரம் வனப்பகுதியில்  கிட்ட தட்ட 531 ஏக்கர் நிலப்பகுதி வனவளத்தினைக்களத்தினால் அடையாளப்படுத்தப்படத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மழை காலங்களில் வெள்ள நீர் அதிகமாக பரவும் நிலமை தொடர்ந்தால் அயல் கிராமங்களான மண்டூர்,போரைதீவு, பழுகாமம், போன்ற கிராமத்தின் ஆடு, மாடுகள் மேற்படி வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடையத்தினை கண்டித்து திக்கோடை, சுரவணையடிஊத்து, விவேகாநந்தபுரம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பொது அமைப்புக்கள் தங்களின் எதிர்ப்பு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வனவளத்துறை திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக எல்லைக் கற்களைப் போடும் பணிகளை நிறுத்துவதாகவும் தெரிவித்தனர்.