ஒளிரும் துறைநீலாவணை வீதிகள்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பிரதி தவிசாளர் றஞ்சினி கனகரெட்ணம் அவர்களின் தனிப்பட்ட முயற்சி துறைநீலாவணை வட்டார உறுப்பினர் க.சரவணமுத்து அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக துறைநீலாவணை உப வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.


  பிரதிதவிசாளர் றஞ்சினி கனகரெட்ணம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நேற்று 24.12 செவ்வாய்க்கிழமை துறைநீலாவணை கிராமத்தில்  தேவையுடைய நாற்சந்திகளுக்கு பெறுமதிவாய்ந்த (LED) மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

பிரதி தவிசாளர் அவர்களினால் கடந்த ஆட்சியின் போது புனர்வாழ்வு அமைச்சிற்க்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக  பத்து இலட்சம் ரூபாய் நிதி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  பன்னிரண்டு வட்டாரங்களுக்கும் மின்விளக்குகள் பொருத்துவதற்க்கென பெற்றுக்கொள்ளப்பட்டது.


இதற்க்கமைவாக பிரதேசபை மூலம் பல கிராமங்களுக்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வரும் நிலையில்
இன்னும் சில தினங்களில் மேலும் சில மின் விளக்குகள் துறைநீலாவணை கிராம வீதிகளுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.