மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பை கொட்டியவர்களுக்கு நேர்ந்த கதி

(சசி துறையூர் )

துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பை கொட்டியவர்கள் துரத்தியடிக்கப்பட்டதோடு கொட்டிய குப்பைகளையும் அள்ளிச்செல்ல வைக்கப்பட்டது .


சிறியரக வாகனமொன்றில் வந்த மூவர் குப்பைகளை கொட்டி தீமூட்டிக்கொண்டிருந்த வேலையில் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அவர்கள் கொட்டிய குப்பைகளை அவர்களே அள்ளிச்செல்லவும் செய்யப்பட்டுள்ளது.

துறைநீலாவணை பிரதான வீதி  இருமருங்குகளிலும் உள்ள  குளம் நீரால் நிரம்பி அழகு நிறைந்த  இயற்கை வனப்பால் எப்போதும் ரம்மியமாக காட்சி தரும்.

இவ்வாறான வீதியின் மருங்குகளை அண்மைக்காலமாக சில நாசகாரர்கள்  குப்பைகளையும், கழிவுகளையும்  கொட்டி நாசம் செய்துவருவதுடன், வீதியில் பெண்கள், சிறுவர்கள் பயணம்செய்வதற்க்கு அச்சமான சூழலையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.