மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.
இதன் கீழ் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியில் உள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் பணிகள் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர்,சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் விமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது செல்வாநகர் கிழக்கு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வறிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கை மற்றும் வறிய நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றினை கருத்தில் கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பு உதவித்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.