மட்டு வாலிபர் முன்னணியினால் சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டது.






இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் கல்லடி டச்பாரில் உள்ள சுனாமி நினைவுத்தூபி வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டது.


சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்கள் ஞாபகார்த்தமாக கல்லடி பொது மக்களினால் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை
கல்லடி வட்டார மாநகர உறுப்பினர் ஜெயந்திரகுமார் அவர்களினால் விடுக்கப்பட்டது.


அந்தவகையில் இன்று சனிக்கிழமை (21.12) இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் அனுசரனையில் வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு நினைவுத்தூபியை அண்டிய பகுதியும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு 
அழகுபடுத்தப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாநகர முதல்வர் எஸ். சரவணபவான்,  தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுப்பினர் ஜெயந்திரகுமார், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன்,  நினைவுத்தூபி பராமரிப்பு குழு  நிருவாகிகள், வாலிபர் முன்னணியின் மண்முனை வடக்கு பிரதேச இணைப்பாளர் எஸ்.ஜனகன், உட்பட வாலிபர் முன்னணி அங்கத்தவர்கள் பலரும்  வேலைத்திட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.