புதுமுகத்துவாரத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15வது ஆண்டு நிறைவாகியுள்ள நிலையில் இன்று பகல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நண்பகல் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் சுனாமி நினைவுத்தூபியில் இன்று நண்பகல் நினைவேந்தல் நிகழ்வும் ஆத்மசாந்திபூஜையும் நடைபெற்றது.

புதுமுகத்துவாரம் மக்களினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வில் சிவஸ்ரீ குகாந்தன் குருக்களினால் ஆத்மசாந்தி பூஜைகள் நடாத்தப்பட்டன.
அத்துடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மாநகர முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர் ஜெயா,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்கள் உணர்வூர்வமாக புதுமுகத்துவாரம் பகுதியில் உயிரிழந்த 210பேர் உட்பட சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆஞ்சலி செலுத்தினர்.