மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் உதயம் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான வெள்ள நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கூலிதொழில் செய்யும் குடும்பங்கள் கடும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டன.

இவ்வாறான பாதிக்கப்பட்ட மக்களை தெரிவுசெய்து அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகளை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

இதன் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை,கொம்மாதுறை பகுதி மக்களுக்கான நிவாரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் சிவப்பிரகாசம் ரமேஸின் நிதியுதவியுடன் வந்தாறுமூலை,கொம்மாதுறை ஆகிய பகுதிகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள 50 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பினர் நிர்வாக சபை உறுப்பினர் உறுப்பினர் குமாரவேல் பாலா,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.