மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல்


(எஸ்.நவா)
கிராங்குளம் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினரால் வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 201912.29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30 மணியளவில் கல்வி அபிவிருத்தி கங்கத்தின் தலைவர் திரு.சி.புவனேந்திரன் அவர்களது தலைமையில் மட்ஃகிராங்குளம் விநாயகர் மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.ஜே.பிரபாகரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கிராங்குளம் கிராமத்தி; கிராம உத்தியோகத்தர்களும் அழைபு;பு அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பெற்றார் நலன்விரும்பிகள் என பலரும் கலந்த கொண்டனர்.
இந்நிகழ்வில் கிராங்குளம் கிராமத்திலுள்ள நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் கிராம உத்தியோகத்தர்களின் சிபார்சுடன் 100 வசதி குறைந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ருபா 1000 பெறுமதியான கற்றல் உபகரணப் பொதி வழங்கி வைக்கப்பட்டது.கிராங்குளம் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினரின் கல்விப் பணிகளில் ஒன்றான இந்நிகழ்விற்கு வெளிநாட்டில் வதியும் தமது நண்பர்களிடம் நிதியுதவி பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.